JCC TROPHY - 2008
பிராங்பேட் ஈகிள் அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.
தமிழ்ப் பிரதேசமாணவர்களின் கல்வி ஊக்குவிப்பிற்காக சுவிஸ்வாழ் யாழ் மத்திய
கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய மட்டுப்படுத்தப்பட்ட 6 பந்து
பரிமாற்றங்களைக்கொண்டு குழு நிலையில் நடாத்தப்பட்ட மென்பந்து
துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டியில் பிராங்பேட் ஈகிள்; அணியினர்
வெற்றி பெற்றுது JCC TROPHY 2008 சுற்றுக் கிண்ணத்தினை சுவீகரித்துக்
கொண்டனர்.
சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்திற்கு தொடர்சியான ஆதரவுகளை
வழங்கி வருபவர்களும் சுவிசின் முன்னனி வர்த்தக நிறுவனங்களான Selva Zug Gmbh,
S&B immo-vers Gmbh, Euro Computer, IMCI Gmbh, Lankasri மற்றும் ஒரு சில
வர்த்தக நேசக்கரங்களின் ஆதரவிலும் நடாத்தப்பட்ட இச் சுற்றுப் போட்டிக்கு
சுவிஸ் ஜேர்மன் நாடுகளில் இருந்து 9 முண்னனி விளையாட்டுக் கழகங்கள் பங்கு
பற்றியிருந்தன.
போட்டிகள் அனைத்தும் பலம் பொருந்திய அணிகளிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இச்
சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜேர்மன் ஸ்ருட்காட் அணியினரை
எதிர்த்து ஜேர்மன் பிராங்பேட் ஈகிள் அணியினர் மோதிக்கொண்டனர். நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற ஜேர்மன் ஸ்ருட்காட் அணியினர் இரண்டு இலக்கு இழந்த
நிலையில் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய
பிராங்பேட் ஈகிள் அணியினர் 4 இலக்குகள் இழந்த நிலையில் 73 ஓட்டங்களைப்
பெற்று வெற்றிபெற்றனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இவ் இறுதிப்
போட்டியில் இறுதிப் பந்து வீச்சுவரை இரு அணிகளும் முழுமையான ஆதிக்கத்தை
செலுத்தியிருந்தமையினால் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது என்பது கடினமாகவே
இருந்தது.
இறுதிப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரனுக்கான விருதினை ஸ்ருட்காட்
விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த கஜன் அவர்களும் சிறந்த பந்து
வீச்சாளனுக்குரிய விருதினை பிராங்பேட் ஈகிள் அணியைச் சேர்ந்த காண் அவர்களும
; சகலதுறை ஆட்டக்காரனுக்கான விருதினை ஸ்ருட்காட் விளையாட்டுக் கழகத்தைச்
சேர்ந்த தாரிக் அவர்களும ; ஆட்டத்தின் நாயகனுக்குரிய விருதினை பிராங்பேட்
ஈகிள் அணியைச் சேர்ந்த இந்தியாஸ் அவர்களும் ஆட்டத்தொடர் நாயகனுக்குரிய
விருதினை பிராங்பேட் ஈகிள் அணியைச் சேர்ந்த சாணக்கியா அவர்களும்
பெற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கான விருதினை S&B immo-vers Gmbh உரிமையாளர் சோதி அவர்களும் Euro
Computer உரிமையாளர் மகேஸ்வரன் அவர்களும்இ யாழ் மத்திய கல்லூரி பழைய
மாணவர்களும் முன்னை நாள் துடுப்பாட்ட வீரர்களுமான விக்கி செல்வன் பிரபா
மில்லர் மற்றும் சுதன் ஆகியோரும் வழங்கி மதிப்பளித்தார்கள்.
வடஇலங்கையில் துடுப்பாட்டத்தினை முதன்முதலாக அறிமுகப்படுத்திய யாழ் மத்திய
கல்லூரியின் இலட்சணை பொறிக்கப்பட்ட சுற்றுக்கிண்ணத்தினையும் 500.- சுவிஸ்
பிராங்கு பணப்பரிசினையும் சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர்
சங்கத்தின் வாழ்நாள் பாதுகாவலர் திரு மகேந்திரராஜா அவர்கள் வழங்க
பிராங்பேட் ஈகிள் அணியினர் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் இடத்தினை
பெற்றுக்கொண்ட ஜேர்மன் ஸ்ருட்காட் அணியினருக்கு 300.- சுவிஸ் பிராங்
பணப்பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து கழகங்கள்
தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வருகின்ற வர்த்தக நிறுவனங்கள் மைதான
ஒழுங்குகளை செய்து தந்த ஓல்ற்றன் விளையாட்டு கழக அணித்தலைவர் திரு மூர்த்தி
முழுமையான ஆதரவினை வழங்கி போட்டிகளை சிறப்பாக நடாத்திய திரு தாமோதரம் திரு
சுதன் திரு இராமச்சந்திரன் ஆகியோருக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பை
வழங்கிவருகின்ற சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்க
அங்கத்தவர்கள் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
|