அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் விஜய்_59 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் இவரது 50வது படம் என்பதால் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்கு முன் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது.

தற்போது இதை விட சிறப்பான பாடல் ஒன்றுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த பாடல் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’ வகையை சார்ந்ததும் என்றும், இதற்கான பாடல் வரிகளை அக்டோபர் 17ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் டுவிட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-aa

2,183 total views, 1 views today