சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் வேதாளம். இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ரிலீஸான இரண்டு நாட்களிலேயே பல சாதனை படைத்துள்ளது.

இந்த டீசர் இந்தியா அளவில் டிரண்ட் ஆகி தற்போது நம்பர்1 இடத்தில் உள்ளது. அதேபோல் சிங்கப்பூரில் 3வது இடத்தில் டிரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

2,623 total views, 1 views today