நண்பர்காக இருந்த தனுஷ்-சிவகார்த்திகேயன் இடையே தொழில் ரீதியாக வந்த போட்டியால் இவர்களுக்கிடையே வந்த சண்டை அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக எந்தவித பிரச்சனையும் இன்றி இருவரும் அமைதியாக இருந்தனர். தற்போது சிவகார்த்திகேயனுக்கு எதிராக தனுஷ் செயல்பட்டு வருகிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின், ரஜினி முருகன் படம் கடந்த ஜூலை மாதமே ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் ஒரு சில பிரச்சினைகளில் சிக்கி படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது இப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தனுஷ், தான் தயாரித்து வரும் ‘நானும் ரெளடிதான்’ படத்தை அதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

தனுஷ், வேணுமென்றே சிவாவிற்கு எதிராக போட்டியாக இந்த படத்தை வெளியிடுவதாகவே முணுமுணுக்கின்றனர் கோடம்பாக்க வாசிகள். இது ஒருபுறமிருக்க அதேநாளில் விக்ரம், சமந்தா நடிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

2,874 total views, 1 views today