At first page
1[4] Next page
swiss_herose_2007_27_11
01
01
02
02
03
03
04
04
05
05
06
06
07
07
09
09
10
10
11
11
12
12
13
13
14
14
15
15
16
16
17
17
18
18
19
19
20
20
21
21
22
22
23
23
24
24
25
25

தேசிய மாவீரர் நாள் நிகழ்வு சுவிசில் Forum Fribourg  மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டபோதிலும் மக்கள் பகல் 11.30 மணிக்கே அணிதிரண்டு வந்தனர்.

12.30 மணிக்கு ஆரம்ப அறிவிப்புகளுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியத்தலைவரின் வரலாற்றுப் புகழ்மிக்க கொள்கை விளக்க உரை மண்டபத்தின் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய பறையொலி எழுப்பப்பட்டது. சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட கரும்புலிக் கோபுரங்கள்; ஒளிப்பாய்ச்சலுடன் திறக்கப்பட்டன.

தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காய் தம்மை ஈந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. மணியொலி எழுப்பப்பட துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. தீப்பந்தங்கள் துயிலுமில்லம் நோக்கி நகர தொடர்ந்து விடுதலை எழுச்சிப் பாடல்கள் இடம்பெற்றன.

மாவீரர்களின் இலட்சியங்களை மனதிலே நிறைத்த வண்ணம் மண்டபத்தை நிறைத்திருந்த மக்கள் மாவீரர்களுக்கான வணக்கத்துக்காக மெழுகுவர்த்திகளையும் கார்த்திகைப் பூக்களையும் தம் கரங்களில் தாங்கியபடி அணிவகுத்துச் சென்றனர்.

அடுத்து துயிலுமில்லத்தில் மாவீரர்கள் மக்களுடன் உரையாடும் காட்சிää துயிலுமில்லப்பாடலுக்கான நடனம்ää நிலம் நாடகம்ää சுவிஸ் நடனாலயங்கள் இணைந்து நடாத்திய எழுச்சி நடனம்ää கவிதை ää தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடத்திய மாவீரர் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்குபு; பரிசுகள் வழங்கப்பட்டதோடு முதல் இடத்தைப் பெற்ற மாணவியின் பேச்சும் இடம்பெற்றது.
அமெரிக்காவில் வாழும் வழக்காளர் திரு. விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் 7000 மேற்பட்ட மக்கள் உணர்வோடு கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழரின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமென உணர்வோடு ஒன்றித்திருந்த மக்கள் தம் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்க மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
 

JAlbum 7.3