நடிகர் விவேக் “சாமியார்” வேடத்தில் இருப்பது போன்ற போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளன. “கில்லாடி” படத்தில் இந்த கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். சிவாஜிகணேசன் “திருவருட்செல்வர்” படத்தில் நடித்த “அப்பர்” வேடம் போல் இது இருப்பதாக சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன் வெளியிட்ட அறிக்கையில் விவேக் போஸ்டர்கள் சிவாஜியை அவமதிப்பது போல் உள்ளது. இது குறித்து விவேக்கிடம் நேரில் பேசி உள்ளேன்.

இந்துக்களை இழிவுபடுத்துவது போன்றும் அவர் செயல் உள்ளது. சிவாஜி ரசிகர்கள் இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார். சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேசிடம் கேட்டபோது, “விவேக் சாமியார் வேடத்தில்தான் நடித்துள்ளார். அது சிவாஜி நடித்த அப்பர் வேடம் அல்ல. இதனை நடிகர் பிரபுவுக்கு தெரிவித்து விட்டோம். நான், விவேக், தயாரிப்பாளர் சந்திரசேகரன் அனைவரும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள். விவேக்கின் கெட்டப் போஸ்டர் படங்கள் போட்டோ சேசனில் எடுக்கப்பட்டவை” என்றார்.

1,714 total views, 1 views today